தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், கழக துணை பொதுச் செயலாளரும், தென்மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் வகித்து சிறப்புரை ஆற்றினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா பேருரை ஆற்றினார். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் போஸ், மேயர் ஜெகன் பெரியசாமி, உமரி சங்கர், ஜெயக்கொடி, மாடசாமி, செந்தூர் மணி, ராஜ லெட்சுமி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், சரவணக்குமார், இளையராஜா, சுரேஷ்குமார், ஆஸ்கார், ராஜேந்திரன், சரவணக்குமார், வீரபாகு, பொன் பாண்டி, சின்னதுரை பாண்டியன், ஈஸ்வரன், மற்றும் கழக முன்னோடிகள், கழக செயல்வீரர்கள், ஒட்டப்பிடாரம் ஒன்றியம் பாக முகவர்கள், ஒன்றிய செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், ஒன்றிய பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிரணியை சார்ந்த பாக முகவர்கள் எம்.பி. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி நன்றிகளை தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


