தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ். எபநேசர் தான் வாங்கிய புதிய வாகனத்திற்கு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஷி ஆனந்த் திருகரங்களால் வண்டியில் தவெக கொடி பறக்க விடப்பட்டது.



இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலா, மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி பொறுப்பாளர் ஜெபமாலை பாக்கியம்,  ஆகியோர் உடன் இருந்தனர் .

அப்போது மாநில பொதுச் செயலாளர் புஷி ஆனந்த் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பொறுப்பாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி தூத்துக்குடியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம்  வெற்றி பெற தாங்கள் அயராது பாடுபட வேண்டும்.


2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி கழகம் தான் ஆட்சி அமைக்கும் நமது தளபதி விஜய் தமிழ்நாட்டில் முதல்வராக பதவி ஏற்பார்கள் என்றும் அது நிச்சயமாக நடக்கும் என்றும் உறுதியாக கூறினார்.

இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னுடைய உறுப்பினர் சேர்க்கையில் தேர்தல் ஆணையம் கொடுத்த உறுப்பினர் நம்பரை எண் பதிவு செய்தது கிடையாது. ஆனால் நமது தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான் இதுவரை முறையான உறுப்பினரை சேர்த்து ஒரு கோடிக்கு மேலே உறுப்பினர் சேர்த்திருக்கிறோம். விரைவில் நீங்கள் தீவிரமாக உறுப்பினரை சேர்த்து தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி பேர் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.


இந்த சாதனையை மிக விரைவில் நாம் படைக்க வேண்டும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களும் தீவிரமாக செயலாற்றுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.