தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.



மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, ரெங்கசாமி, ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.