தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராஜாஜி பூங்கா மற்றும் லெவஞ்சிபுரம் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

மேலும் மாநகர மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் சில பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அந்தப் பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆய்வின் போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் உடன் இருந்தார்.