டிசம்பர் 27ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து (Handball) போட்டியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து அணி தேர்வு செய்யப்பட்டு, சிறப்பான பயிற்சியுடன் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர், வீராங்கனைகளுக்கு வீரபாண்டி பட்டினத்தில் அமைந்துள்ள ST. Joseph’s School (CBSE) வளாகத்தில் ஒரு வார காலம் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் உடற்திறன், அணித் தந்திரம், வேகமும் துல்லியமும் கொண்ட ஆட்ட முறைகள் குறித்து முக்கிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த அணிக்கு பலராமன், ரம்யா, ஸ்வேதா, மோகன், இன்பசதீஷ்குமார் ஆகிய பயிற்சியாளர்கள் சிறப்பாக பயிற்சி அளித்ததுடன், மாநில அளவிலான போட்டிக்காக அணியுடன் இணைந்து மயிலாடுதுறைக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.
மாநில அளவிலான இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி பதக்க வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கையை விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் Er. Abdul Vathuth, B.E தெரிவித்தார்.