ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்களை முழுமையாக பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் கழக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கேட்டுக் கொண்டுள்ளார்.


வரும் 27.12.2025 (சனிக்கிழமை) மற்றும் 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அந்தந்த வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.


இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலை முறையாக சரிபார்த்து, விடுபட்டுள்ள தகுதியான புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் ஒன்றிய, பகுதி, கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் (BDA) மற்றும் கழக முன்னோடிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம் என்பதால், தகுதியான ஒருவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்ற நோக்கில் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.