தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 



அதன் ஒரு பகுதியாக மில்லர்புரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் செல்லும் பகுதிகளையும் பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். சீரான குடிநீர் வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது பகுதி கழக செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.