தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ சண்முகையா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் 19 ஊராட்சிகளில் குடிநீர் வசதி, தெருவிளக்கு சாலை வசதி, குறைந்த மின்னழுத்தம் உள்ளதா? போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தும் கட்டட கட்டுமானம் பணிகள் எந்தெந்த ஊராட்சிகளில் நடைபெற்று வருகிறது.

தற்போது கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட வேண்டிய கட்டங்கள் விபரம் பற்றியும் கேட்டறிந்தார். அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைத்திடும் வகையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மகளிர் திட்ட பணியாளர்களிடமும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைக்கோட்ராஜா, பானு, ஒன்றிய பொறியாளர்கள் ரவி, பிரான்சிஸ்கோ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னுச்சாமி, நாராயணன், தங்கேஸ்வரி, பழனிச்செல்வி மற்றும் ஊராட்சி செயலர்கள், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, S.R. சுப்பிரமணியன் துணை செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன் தலைமை கழக பேச்சாளர் பொன்னரசு, இளம் பேச்சாளர் சண்முகநாராயணன், சைமன் தகவல் தொழில்நுட்ட அணி மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.