தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கு மருதப்பெருமாள் என்பவர் விருப்ப மனு அளித்தார்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவிக்கு மருதப்பெருமாள் என்பவர் விருப்ப மனுவை மாநகராட்சி உதவி ஆணையர் பாரிஜான் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் குருவையா ஆகியோரிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வக்குமார் காதுகளாதோர் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் தங்கராஜ், சின்னத்துரை கமல்தனகேசன், தினேஷ்குமார், போஸ்கோ, லூக்காஸ், ஜெயபால், சுயம்புலிங்கம், சுப்புராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.