தூத்துக்குடி மாநகராட்சி 42 வது வார்டு பகுதி வண்ணார் 2 வது தெருவில் அமைந்துள்ள  42 வது வட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் அறங்காவலர் குழு தலைவருமான கோட்டு ராஜா, மண்டல தலைவி அன்னலெட்சுமி, ஆகியோர் தலைமையில், வட்ட செயலாளர் மாரி செல்வ ஈஸ்வரன் முன்னிலையில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து, கழக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பு கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் வட்ட துணை செயலாளர் ஜெபக் குமார் ரவி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்ட பிரதிநிதி தேவ பிச்சை, சண்முக புரம் பகுதி மாணவரணி சண்முக வேல், மகளிரணி ராமலெட்சுமி, சண்முக புரம் பகுதி சற்குணம், மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.