தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் ஈகோ பெமினின் எக்சலன்ஸ் (Eco Feminine Excellence) பிரிவு, வீராங்கனை அமைப்பு மற்றும் மக்கள் குடியுரிமை சங்கம் (PUCL) இணைந்து “Upgrading Climate Action for a Greener and Safer Future – SDG 13” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கினை அக்டோபர் 17, 2025 அன்று கல்லூரி மாநாட்டு அரங்கில் நடத்தியது.
முனைவர் பியூலா ஜெர்லின், இயக்குனர் – ஈகோ பெமினின் எக்சலன்ஸ் மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியர், வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ தலைமையுரையில், “காலநிலை மாற்றத்தை தடுக்க இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. உயிரிசையை காப்பதே மனிதனின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்” என்று வலியுறுத்தினார்.
முதன்மை உரையை அரசு வழக்கறிஞர் எம். வெற்றி செல்வன் (பூவுலகின் நண்பர்கள்) வழங்கினார். அவர் “Planetary Health and Climate Justice” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமூக நீதி உறுதியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனக் கூறினார்.
சிறப்பு உரை – I யை சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர் பாத்திமா பாபு வழங்கினார். “A Feminist Perspective on Climate Action” என்ற தலைப்பில், பசுமையான உலகை உருவாக்க பெண்களின் பங்கு மிக முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
சிறப்பு உரை – II யை மக்கள் குடியுரிமை சங்கத் தலைவர் அருட்தந்தை எக்ஸ். டி. செல்வராஜ் வழங்கினார். “Climate Resilience and Conservation – Urgent Need for Current Scenario” என்ற தலைப்பில், தற்போதைய சூழலில் உயிரினப் பல்வகைமையை காக்கும் அவசியத்தை அவர் விளக்கினார்.
கருத்தரங்கில் பல கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வு, இயற்கையை நேசிக்கும் உணர்வையும், நிலையான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் மனப்பாங்கையும் அனைவரிடமும் வளர்த்தது.
தூத்துக்குடி
தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு: “பசுமையான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான காலநிலை நடவடிக்கைகள்” குறித்து விழிப்புணர்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறிய ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் – மழைநீர் தேக்கம் காரணமாக மீறல் வெளிச்சம்!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தலையீட்டில் மருதன்வாழ்வு குளம் மடை சரிசெய்யப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026