மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டி செப்டம்பர் 11,12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் SAV கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இப்போட்டியில் 27அணிகள் கலந்து கொண்டது. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி அணியும் வடக்கன்குளம் SAV கல்லூரி அணியும் மோதினர். இதில் தூத்துக்குடி St. மேரிஸ் கல்லூரி அணி 42 வெற்றி புள்ளிகளையும் வடக்கன்குளம் SAV கல்லூரி அணி 32 வெற்றி புள்ளிகளையும் பெற்றனர். 10 புள்ளிகள் வித்யாசத்தில் தூத்துக்குடி St.மேரிஸ் கல்லூரி வெற்றி பெற்றது.
முதலிடம் பெற்ற தூத்துக்குடி St.மேரிஸ் கல்லூரி அணி வீராங்கனைகளுக்கு SAV கல்வி குழுமத்தின் தாளாளர் திவாகரன் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்கள். வெற்றி பெற்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ராஜாவுக்கு தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். மென்மேலும் வளர்ந்து மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அனிதா ராதாகிருஷ்ணன் தலைவர் அமெச்சூர் கபடி கழகம், மைக்கேல் செயலாளர் (பொறுப்பு) அமெச்சூர் கபடி கழகம் மணத்தி கணேசன் ஒருங்கிணைப்பாளர் அமெச்சூர் கபடி கழகம் ஜிம்ரீவ்ஸ் பொருளாளர் அமெச்சூர் கபடி கழகம் கண்ணன் நடுவர் குழு சேர்மன் அமெச்சூர் கபடி கழகம் மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், நிர்வாகிகள், யூனியன் பொறுப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் வீரர்கள் மேலும் கல்லூரி முதல்வர் துணை முதல்வர் மற்றும் செயலாளர் உட்பட பலர் பாராட்டினார்கள்.
தூத்துக்குடி
கபடி போட்டி தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி முதலிடம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர்கள் பழையகாயல் மக்களின் குறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைக்கும் வரி விதித்ததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026