தூத்துக்குடி 40 வது வார்டு அதிமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எல். எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் 550 பேருக்கு சில்வர் பாத்திரம் ஐந்து பேருக்கு தையல் இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி,  மற்றும் குப்பைக்கும் வரி போட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தங்கத் தாரகை புரட்சித் தலைவி இரும்பு பெண்மணி அம்மா என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 40 வது வார்டு அதிமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எல். எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி சன் பீட்டர் கோவில் தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எல். எட்வின் பாண்டியன் தலைமையில் மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சி.த செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு 550 பேருக்கு சில்வர் பாத்திரம் மற்றும் ஐந்து ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பெண்கள் சில்வர் பாத்திரத்தை வாங்கிச் சென்றனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா இன்னும் ஒவ்வொரு தொண்டன் மற்றும் பெண்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்றார் மேலும் மாநகராட்சியில் சொத்து வரி குடிநீர் வரி மற்றும் குப்பைக்கு கூட வரி போட்டு பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னாள் மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், சசிகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர் அந்தோணி, சகாயராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சகாயராஜ், நியாம் ரோரால்டு, பெவின், சிறுபான்மை பிரிவு அசன், அபுதாகிர், பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி குரூஸ்புரம் அண்டோ, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், சகாயம், டெரஸ், ஃபெலிக்ஸ், ஜோசப், ஜேசுராஜ், வழக்கறிஞர் ராஜாராம், பிரபாகர், தெர்மல் முருகேசன், 40 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் காந்திநகர் உதயகுமார், ஜான்சன், வர்கீஸ், வளன்,  ஆண்ட்ரூஸ், அரவிந்த், ஜெனிஸ், வசந்த், திவாஸ், ஜெப்பி, ஸ்டெபின், அஜித், கேஸ்ட்ரோ, கிராஸ்வின், அஜய், ரியாஸ், ஜான்சன், ஜாஸ்பர், சோல்ஜர், செல்ட்டன், ஜாக்சன், இன்பென்ட், பிரான்சிஸ், சரான், ஜெகதீஷ், ஸ்டார்வின், சரான், டேனியல், பிரைட்டன், சுரேஷ், பிரபாகரன், 41 வார்டு அசோக், தாமஸ், மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.