தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவியர்கள் சார்பில் (13.09.2025) அன்று பழைய காயல் ஊராட்சி மக்களிடம்  விலங்கியல் துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மக்களின் குறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .

நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள மக்களுக்கு‌ மக்கும் மற்றும் மக்காத குப்பை, சாலை மற்றும் தெரு மின் விளக்கு அமைத்தல், கழிவு நீர் வெளியேற்றம், மழைநீர் சேகரிப்பு, போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பழையகாயலில் உள்ள புனித  அந்தோணியார் பள்ளி வளாகத்தையும் சுத்தப்படுத்தினர்.

நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ் துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ்  மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.  

விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஜோஸ்லின் பேராசிரியர், முனைவர் செல்வி ஆகியோர் வழி நடத்தினர். மாணவர்களுக்கு சமூகப் பணி மற்றும் கிராம முன்னேற்றத்தில் மதிப்பு மிக்க அனுபவத்தை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.