தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் ஈ.வி. ராமசாமியின் 147 வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளை “சமூகநீதி நாள்” ஆகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இனிப்புகள் வழங்கி, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், ஜனகர், செல்வகுமார், சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை ஸ்டாலின், மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் ரெங்கசாமி, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், ராஜசேகர், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.