தூத்துக்குடி, செப்.17 தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலை முன், அவரது 147வது பிறந்த நாளையொட்டி இன்று (செப்.17) மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பின்படி, பெரியார் பிறந்தநாள் “சமூகநீதி நாள்” ஆகக் கடைப் பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சுசிரவீந்திரன், மாநில திமுக பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளர் சரத்பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட, மண்டலம், பகுதி மற்றும் மாநகர திமுக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்று பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெரியார் 147வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு மரியாதை – சமூகநீதி நாள் உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் பெரியார் 147 வது பிறந்தநாளில் சமூகநீதி நாள் உறுதிமொழி – அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026