தூத்துக்குடி சமூக சீர்திருத்தவாதியும், சுயமரியாதை இயக்கத்தின் தோற்று விப்பாளருமான தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், தலைமையில் மாநில தீர்மானக்குழு உறுப்பினரும் , மாவட்ட அவைத் தலைவருமான பேச்சி ராஜ், முன்னிலையில் தெற்கு காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், மாநகர துணை செயலாளர் முருகேசன், மதிமுக தொண்டர் வழக்கறிஞர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், எம்எல்எப் திட்ட தலைவர் காசிராஜன், மதிமுக பொய்யாமொழி, தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள் கட்சியின் நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.