தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் நகர்மன்ற தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமி நினைவு தினம் இன்று தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து போல் பேட்டையில் அமைந்துள்ள என். பெரியசாமியின் நினைவிடத்தில் சண்முக புரம் பகுதி திமுக செயலாளரும், 39 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் நினைவிடத்தில் அமைந்துள்ள பெரியசாமியின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

20 வது வார்டு வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், மேயரின் உதவியாளர் பிரபாகரன், உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.