தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டு, பூபாலராயர்புரம் பத்ரகாளியம்மன் கோவில் 2-வது தெரு பகுதியில், கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததால், சிறிய அளவில் கூட மழை பெய்தால் அந்த நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
இதனால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தச் செயல்திட்டமும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இந்நிலையால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும், விரைவில் கால்வாய்களை சுத்தம் செய்து நீர் ஓட்டம் சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
மழை வந்தாலே வீடுகளில் கழிவு நீர் வெள்ளம்! பூபாலராயர்புரம் 2-வது தெரு மக்களின் கோரிக்கை — உடனடி நடவடிக்கை தேவை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“லயன்ஸ் டவுன் மக்களுக்கு நம்பிக்கையின் ஒளி – வீடுகளை காப்பாற்ற உறுதி கூறிய லஞ்ச ஒழிப்பு பாபு”
அடுத்த
"வீர காவலர்களுக்கு மரியாதை – தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு"
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026