இராமேஸ்வரம் (டு) தூத்துக்குடி இ.சி.ஆர் சாலையில் குளத்தூர் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு முன்பு ஏற்கனவே கடந்த காலத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டதால் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகிலே குறிஞ்சி நகர் கிராமம் உள்ளது. இந்த குறிஞ்சி நகருக்கு பின்பு அரசு டாஸ்மார்க் மதுபான கடையும் உள்ளது. மதுபான கடைக்கு குடிக்க வருகிறவர்கள் இந்த இ.சி.ஆர் ரோட்டில் இருந்து பின்புறமாக கீழே இறங்கி செல்ல வேண்டும். அதேபோல டாஸ்மார்க் கடையில் மது பாட்டில் வாங்கியவர்கள் இந்த இ.சி.ஆர் சாலை வழியாக மேலே வந்து தான் கடந்து செல்ல முடியும். இது மிகவும் ஒரு முக்கியமான சாலையாக இருப்பதால் இந்த இடத்தில் ஏற்கனவே பல விபத்துக்கள் நடைபெற்று இருக்கிறது.

இதனால் அரசு ஏற்கனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் ஏற்படுத்தாத வண்ணம் ஏற்பாடு செய்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதியதாக வேம்பார் (டு) தூத்துக்குடி வரை இ.சி.ஆர் சாலையில் தார் ரோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் குளத்தூர் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள இந்த வேகத்தடையை அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் மீண்டும் விபத்து ஏற்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் தூத்துக்குடி இ.சி.ஆர் சாலையை பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு இ.சி.ஆர் சாலை பிரியங்கா ஓட்டல் குறிஞ்சி நகரில் உள்ள மாணவர் விடுதி முன்பு மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

இல்லை என்றால் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக இந்தப் பகுதி பொதுமக்களே அழைத்து விரைவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். எனவே தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே வேகத்தடை இருந்த இடத்தில் குளத்தூர் இ.சி.ஆர் சாலையில் அரசு மாணவர் விடுதி முன்பு வேகத்தடையை புதியதாக அமைக்க வேண்டும். என்று பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.