பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க கோரி தமிழக முழுவதும் இன்று கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் எட்டையபுரம் ரோடு சாமி பல்க் எதிரே அமைந்துள்ள எஸ்.சி.டி.சி பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக இன்று (27.05.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிப்போ செயலாளர் மாயக் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சிஐடியு தலைவர் பேச்சு முத்து கண்டன உரை நிகழ்த்தினார். இரயில் ஓய்வு பெற்ற அமைப்பு டென்சிங் சிறப்பு ஆற்றினார். எஸ்.சி.டி.சி சிஐடியு மாநில துணை செயலாளர் பிச்சை மணி கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்பாட்டத்தில் கண்ணன், சௌந்திர பாண்டி, அலெக்ஸ், குமர குருபரன், மற்றும் சிஐடியு தோழர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
