தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகரில் மழை காரணமாக தேங்கியுள்ள நீரை விரைவாக அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான ஏவிஎம் மருத்துவமனை முன்பகுதியில் மழைநீர் தேங்கியிருந்ததை தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாக நீர் சீராக வெளியேறுகிறதா, பொதுமக்கள் நெரிசல் அல்லது சிரமம் இல்லாமல் போக்குவரத்து நடைபெறுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்தார். மேலும், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மாநகராட்சி பொறுப்பாளர்கள், துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் மாநகராட்சி தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறது.
தூத்துக்குடி
மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரம் – தூத்துக்குடியில் மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒளியும் ஒற்றுமையும் இணைந்த தீபாவளி — தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் 26 வகை பரிசுகள் வழங்கல் விழா!
அடுத்த
தீபாவளி பண்டிகையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிகள் வெடிக்க வேண்டும் – சகா கலைக்குழு முனைவர் சங்கர் வேண்டுகோள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026