ஒளியின் திருநாளான தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் ஒன்றிணைந்தனர். பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினருக்காக 26 வகையான சிறப்பு பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி தூத்துக்குடி பிரஸ் கிளப் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக ஒற்றுமை மற்றும் சக ஊழியர்களின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த பரிசு விநியோகம், இம்முறை மேலும் சிறப்பாக அமைந்தது.

உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 26 வகை பொருட்களில் 5 கிலோ அரிசி பை, ஹாட் பாக்ஸ், ரவை, மைதா, சீனி, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, மசாலா வகைகள், தேங்காய், கடலைமிட்டாய், பட்டாசுகள் உள்ளிட்ட பல பொருட்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிகழ்ச்சியில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து ஆகியோர் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர்கள் சரவணன், சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதேபோல் உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், கார்த்திகேயன், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், சந்தனரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.