தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, கரும்பு, ரூ.3,000 ரொக்கம் மற்றும் வேஷ்டி–சேலையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டநத்தம் நியாய விலைக் கடையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் சண்முகவேல், கூட்டுறவு செயல் அலுவலர் சுடலைமணி, வட்டார வழங்கல் அலுவலர் ராஜி, கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல், கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கொண்டல் சுப்பையா, இளைஞரணி மாரிகுமார், ஒன்றிய மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் காமினி, கிளை செயலாளர்கள் ஜான், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை பெற்றுக் கொண்டனர்.