குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களில் பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளம் சாலையம் தெருவில் அமைந்துள்ள அமுதம் நியாய விலைக்கடையிலும், 0956 – விளாத்திகுளம் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடையிலும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவருமான G.V. மார்கண்டேயன், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கப் பரிசினை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பொதுவினியோகத் திட்ட அலுவலர்கள், கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர்.