தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலும், படைப்பாற்றலும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகள் இன்று (15.10.2025) காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
கவிதைப் போட்டி பிரிவில் செய்துங்கநல்லூர் செயிண்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரி இயற்பியல் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி ம. சந்தனமாரி முதல் பரிசு, தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி உயிரி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி க. நூஹா பேகம் இரண்டாம் பரிசு, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவன் சொ. மணிகண்டன் மூன்றாம் பரிசு பெற்றனர்.
கட்டுரைப் போட்டி பிரிவில் தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரி வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி சூ. டால்மியா முதல் பரிசு, தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி தமிழ் கல்வியியல் முதலாம் ஆண்டு மாணவன் மி. இருதய ஈசாக் இரண்டாம் பரிசு, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி உளவியல் மூன்றாம் ஆண்டு மாணவி ஜா. கிஃப்டா மேரி மூன்றாம் பரிசு பெற்றனர்.
பேச்சுப் போட்டி பிரிவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி குற்றவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி மு. கமலி முதல் பரிசு, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதுகலை வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஸ். அஸ்வர்னிஹா இரண்டாம் பரிசு,
ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி ம. மகாலெட்சுமி மூன்றாம் பரிசு பெற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000, மேலும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திரு. வ. சுந்தர் அவர்கள் சிறப்பாக பணியாற்றினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் – வெற்றியாளர்களுக்கு பரிசும் மாநில போட்டிக்கு வாய்ப்பும்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இனிய தீபாவளி: மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கொண்டாடிய மனம் கவர்ந்த விழா!
அடுத்த
மக்களின் மனம் கேட்கும் முகாம் – தூத்துக்குடியில் தொடங்கியது மேற்கு மண்டலத்தில்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026