தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சி நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கி இனிப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும், பணியாளர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பேன்ட், சட்டை, சேலை போன்ற ஆடைகள் வழங்கி, தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், திமுக கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பணியாளர்களுடன் இணைந்து பண்டிகை கொண்டாட்டத்தில் உற்சாகம் கூட்டினர்.

மக்களுக்காக தினமும் இடைவிடாது பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இதுபோன்ற அன்பும் அங்கீகாரமும் அளித்த மேயரின் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.