தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை களையும் கூட்டம் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. அப்போது பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு மாநில துணைத் தலைவர் கோ.ஞா. யோபுசாலமோன் தலைமையில், நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் முன்னிலையில் சாலையை சேதப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்திற்குட்பட்ட சேர்வைக்காரன்மடம் (டூ) சாயர்புரம் செல்லும் மெயின்ரோட்டில் வினோத்குமார், அந்தோணிராஜ், ஞான்ராஜ், சுனைராஜா ஆகியோர் தங்களுடைய வீட்டு கழிவுநீரை மெயின்ரோட்டில் விடுகின்றனர்.
இதனால் சாலை பழுதாகி 1 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டும், உயிர்பலி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேற்படி இடத்தில் கடந்த மாதம் (10.05.2025) அன்று அந்த சாலை வழியாக நானும் எனது மனைவியும் சென்ற போது மேற்படி சாலையின் பள்ளத்தில் விழுந்து எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், அன்றாடம் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து கை, கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள், சேர்வைக்காரன்மடம் (டூ) சாயர்புரம் செல்லும் மெயின்ரோட்டில் வீட்டின் கழிவுநீரை திறந்து விட்டு வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தியும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வரும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.