ஜூன் 3 ம் தேதியான நாளை கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தந்தவர். அவர் மறைந்தாலும் தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகளால் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
கலைஞர் செய்த சாதனைகளை பற்றி தெரியாதவர்கள் தமிழ்நாட்டிற்கு கலைஞர் என்ன செய்தார் என்ற கேள்விக்கு பெரியார், அண்ணா வழிவந்த பெரியவர், முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் மு. கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தன்று அவரை போற்றி புகழ் வணக்கம் செய்து சாதனைகளை பட்டியலிடுவதில் பெருமை கொள்கிறது " செய்தி களம் " நியூஸ் வெப்சைட் குழுமம்.
முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் மு. கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகள் :-
1. இந்தியாவிலேயே முதல் முதலில் காவல்துறை ஆணையம் அமைத்தது கருணாநிதி,
2. வாடகை நிர்ணயம் குடியிருப்பு சட்டம் அமைத்து தந்தது கருணாநிதி,
3. இலவச குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப் பட்டவர்களுக்கு கொடுக்கும் திட்டத்தை தந்தவர் கருணாநிதி
4. கையில் இழுக்கும் ரிக்ஷா வை ஒழித்து இலவச சைக்கிள் மோட்டார் ரிக்ஷா தந்தவர் கருணாநிதி,
5. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்தது கருணாநிதி,
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துக் கொடுத்தவர் கருணாநிதி,
7. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தவர் கருணாநிதி,
8. 1500 பேர் கொண்ட கிராமங்களுக்கு சாலை வழித்தடம் அமைத்தவர் கருணாநிதி,
9. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்து தந்தவர் கருணாநிதி
10. போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கருணாநிதி
11. பிற்படுத்தப்பட்டோர், மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான துறையை அமைத்து தந்தவர் கருணாநிதி,
12. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை தந்தவர் கருணாநிதி,
13. அரசியலமைப்பில் பிசி 31% மற்றும் எஸ்சி 18% உயர்த்தி தந்தவர் கருணாநிதி,
14.பியுசி வரை இலவச கல்வி வகுத்து தந்தவர் கருணாநிதி,
15. மே 1 சம்பளத்துடன் கூடிய பொது விடுப்பு விடுமுறை தந்தவர் கருணாநிதி,
16. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறை நாட்களாக அறிவித்தவர் கருணாநிதி,
17. முதல் விவசாய கல்லூரியை உருவாக்கித் தந்தவர் கருணாநிதி,
18. அரசு ஊழியர் குடும்ப நலத் திட்டம் தந்தவர் கருணாநிதி,
19. அரசு ஊழியர்களுக்கான மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர் கருணாநிதி,
20. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர் கருணாநிதி,
21. கோயில்களில் கொடைகளுக்கான கருணை இல்லம் தந்தவர் கருணாநிதி,
22. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்துத் தந்தவர் கருணாநிதி,
23. நிலம் விற்பனை வரையறை வகுத்து தந்தவர் கருணாநிதி,
24. இரண்டாம் அழகு நிலக்கரி மின் உற்பத்தியை நெய்வேலிக்கு கொண்டு வந்தவர் கருணாநிதி,
25. பெட்ரோல் தொழிற்சாலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்தவர் கருணாநிதி,
26. சிப்கோ உருவாக்கியது கருணாநிதி,
27. உருது பேசும் இஸ்லாமி பிற்படுத்தப்பட்டோர்களை தமிழ் பேசும் இஸ்லாமியர் போல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி,
28. மனு நீதி திட்டம் தந்தவர் கருணாநிதி,
29. பூம்புகார் கப்பல் நிறுவனத்தை தந்தவர் கருணாநிதி,
30. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
31. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி,
32. பயணச்ச நிலத்தின் மீதான வரி விதிப்பு விதியை நீக்கம் செய்தவர் கருணாநிதி,
33. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வன்னியர்களை சீர் மரபினர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி,
34. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
35. தாழ்த்தப்பட்டோருக்கான 18% இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
36. பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
37. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இலவச கல்வியை தந்தவர் கருணாநிதி,
38. வருமான உச்சவரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி, இலைகளை பட்டப்படிப்பு வரை தந்தவர் கருணாநிதி,
39. தாழ்த்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி தந்தவர் கருணாநிதி,
40. இந்தியாவிலேயே முதல் முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தவர் கருணாநிதி,
41. சொந்த பொண்ணுக்கு சம உரிமை உள்ளது என்று சட்டம் ஆக்கியவர் கருணாநிதி,
42. அரசு வேலை வாய்ப்புகள் 30% இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
43. ஆசியாவிலேயே விலங்குகளுக்கு கால்நடை அறிவியல் மருத்துவம் அமைத்தவர் கருணாநிதி,
44. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்டம் தந்தவர் கருணாநிதி,
45. விதவைப் பெண்கள் மறுமணம் நிதி உதவி தந்தவர் கருணாநிதி,
46. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைத்துத் தந்தவர் கருணாநிதி,
47. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர் கருணாநிதி,
50. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை அமைத்தவர் கருணாநிதி,
51. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
52. பெண்களுக்கு சுய உதவி குழுக்களை அமைத்து தந்தவர் கருணாநிதி,
53. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் கருணாநிதி,
54. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் கருணாநிதி,
55. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியை நிறுவியவர் கருணாநிதி,
56. முதல் முதலில் காவேரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர் கருணாநிதி,
57. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தவர் கருணாநிதி,
58. உள்ளாட்சி பதவிகளுக்கு 33% இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
59. இரு பெண் மேயர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று சொன்னவர் கருணாநிதி,
60. முதல்முறையாக பெண்களுக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் இடம் அளிக்க வழிவகை செய்தவர் கருணாநிதி,
61. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கையை அமைத்து தந்தவர் கருணாநிதி,
62. முதல் முறையாக விதவைப் பெண்களுக்கு தொழில் தொடங்க உதவியவர் கருணாநிதி,
63. கிராமங்களில் கான்கிரீட் சாலைகளை அமைத்து தந்தவர் கருணாநிதி
64. 24 மணி நேரமும் மருத்துவ சேவையை தந்தவர் கருணாநிதி
65. மெட்ராஸை சென்னை என்று மாற்றியவர் கருணாநிதி
66. தொழில் முனையில் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி,
67. சமத்துவபுரம் தந்தவர் கருணாநிதி,
68. கிராமங்களில் மினி பேருந்துகளை கொண்டு வந்தவர் கருணாநிதி,
69. இந்தியாவிலேயே முதல் முதலில் டாக்டர். அம்பேத்கரின் பெயரில் சட்டக் கல்லூரியை நிறுவியவர் கருணாநிதி,
70. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகத்தை தந்தவர் கருணாநிதி,
71. உருது அகடாமி தந்தவர் கருணாநிதி,
72. சிறுபான்மையர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர் கருணாநிதி,
73. உழவர் சந்தை திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
74. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
75. கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
76. 133 அடி திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் நிறுவியவர் கருணாநிதி,
77. டைட்டில் பார்க் சென்னையில் அமைத்தவர் கருணாநிதி,
78. இலவச வீட்டுமனைகளை வழங்கும் திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
79. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் வருவோருக்கு மேற்படிப்புக்கு உதவும் திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
80. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை அமைத்தவர் கருணாநிதி,
81. விவசாயம் கூலி வேலை செய்யும் விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்து தந்தவர் கருணாநிதி,
82. பொது கூலி வேலை செய்பவருக்கு நலவாரியம் அமைத்து தந்தவர் கருணாநிதி,
83. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டித் தந்தவர் கருணாநிதி,
84. 20 அணைகள் கட்டித் தந்தவர் கருணாநிதி,
85. பள்ளிகளில் மதிய உணவுகளோடு முட்டை தந்தவர் கருணாநிதி,
86. மதுரை நீதிமன்றம் கட்டித் தந்தவர் கருணாநிதி,
87. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
88. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
89. நலிவுற்ற குடும்ப நிதி திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
90. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை கட்டித் தந்தவர் கருணாநிதி,
91. 140 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவ கட்டிடங்கள் கட்டித் தந்தவர் கருணாநிதி,
92. 13000 நற்பணி பணியாளர்களை நியமனம் செய்பவர் செய்தவர் கருணாநிதி,
93. முதல்முறையாக பத்தாயிரம் சாலை பணியாளர்களை நியமனம் செய்தவர் கருணாநிதி,
94. சென்னை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க 80 மேம் பாலங்களை கட்டித் தந்தவர் கருணாநிதி,
95. ரூபாய் 1500 கோடியில் 350 துணை மின் நிலையங்களை உருவாக்கியவர் கருணாநிதி,
96. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டங்களை தந்தவர் கருணாநிதி,
97. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
98. வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்து தந்தவர் கருணாநிதி,
99. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டங்களை வகுத்து தந்தவர் கருணாநிதி,
100. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு உபயோக பொருள்களை நியாய விலைகளில் தந்தவர் கருணாநிதி,
101. நியாய விலை கடைகளில் 10 சமையல் பொருட்களை ஐம்பது ரூபாய் களுக்கு கிடைக்க வழிவகை செய்தவர் கருணாநிதி,
102. விவசாய கடன் 7000 கோடிகளை தள்ளுபடி செய்தவர் கருணாநிதி,
103. சரியான நேரத்தில் விவசாய கடன்களை செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்று சொன்னவர் கருணாநிதி,
104. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை 1050 ஆக உயர்த்தியவர் கருணாநிதி,
105. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலையை 1100 ஆக உயர்த்தியவர் கருணாநிதி,
106. 172 உழவர் சந்தைகளாக உயர்த்தியவர் கருணாநிதி,
107. ஒரு டன் கரும்பு கொள்முதல் விலையை 2000 ஆக உயர்த்தியவர் கருணாநிதி,
108. மாவட்டத் திட்டத்திற்குள் நிதி நீர் இணைப்பு திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
109. 150 கோடி காவிரி குண்டு இணைப்பு திட்டம் செய்தவர் கருணாநிதி,
110. ரூபாய் 359 கோடி செலவில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்மியாறு நதிநீர் இணைப்பு திட்டம் தந்தவர் கருணாநிதி,
111. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர் கருணாநிதி,
112. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் கருணாநிதி,
113. 10 வீட்டு வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கருணாநிதி,
114. 1800 கோடி செலவில் ஐந்தாயிரம் கோயில்களுக்கு மேல் உள்ள கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தவர் கருணாநிதி,
115. அர்ச்சர்கள், பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கியவர் கருணாநிதி,
116. ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம் தந்தவர் கருணாநிதி,
117. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்களுக்கான நடமாடும் மருத்துவ திட்டங்களை தந்தவர் கருணாநிதி,
118. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவை தந்தவர் கருணாநிதி,
119. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர் கருணாநிதி,
120. டைட்டில் பார்க்கை மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாநிலங்களில் உருவாக்கியவர் கருணாநிதி,
121. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டங்களை தந்தவர் கருணாநிதி
122. பேருந்து கண்டங்களை உயர்த்தாமல் 13 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்கியவர் கருணாநிதி,
123. அருந்ததியர் இனத்திற்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடுகளை தந்தவர் கருணாநிதி,
124. அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளோடு 10 ஆயிரத்துக்கு மேல் கிராம பஞ்சாயத்துகளை உருவாக்கியவர் கருணாநிதி,
125. 320 பேரூராட்சிகளை உருவாக்கி அனைத்து பேரூராட்சிகளுக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை தந்தவர் கருணாநிதி,
126. அனைத்து இனத்தவர்களும் அர்ச்சகர்களாகும் உரிமையை பெற்று தந்தவர் கருணாநிதி,
127. உலகம் தர வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர் கருணாநிதி,
128. ஆசியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு புதிய சட்டமன்றத்தை உருவாக்கியவர் கருணாநிதி,
129. அடையார் சூழ்நிலை ஆராய்ச்சி பூங்காவை அமைத்தவர் கருணாநிதி,
130. சென்னையில் செம்மொழி பூங்காவை அமைத்து தந்தவர் கருணாநிதி,
131. கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை தந்தவர் கருணாநிதி,
132. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தவர் கருணாநிதி,
133. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கருணாநிதி,
134. ராமநாதபுரம், பரமக்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கருணாநிதி,
135. கலைஞர் வீடு திட்டம் தந்தவர் கருணாநிதி,
136. உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர் கருணாநிதி,
137. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கருணாநிதி,
138. 119 புதிய நீதிமன்றங்களை உருவாக்கியவர் கருணாநிதி,
139. மாலை நேரம் மட்டும் விடுமுறை தின நீதிமன்றங்களை உருவாக்கியவர் கருணாநிதி,
140. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் உருவாக்கியவர் கருணாநிதி,
141. தனியார் பள்ளிகளின் கட்டணங்களை நிர்ணயிக்கும் ஆணையம் அமைத்து தந்தவர் கருணாநிதி,
142. சமச்சீர் கல்வி தந்தவர் கருணாநிதி,
143. இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி தந்தவர் கருணாநிதி,
144. முதல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு 80 ஆயிரம் வரை பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கருணாநிதி,
145. இஸ்லாமியர்களுக்கு மூன்று சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி,
146. இலவச சிலிண்டர் வழங்கியவர் கருணாநிதி,
146. பேருந்து பால் கட்டணங்களை உயர்த்தாதவர் கருணாநிதி
இன்னும் பல திட்டங்களை வகுத்து தந்தவர் கல்லறையில் உறங்கிய பின்னரும் உழைத்து கொண்டு இருக்கிறார்.
