தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டில் அமுதம் நியாயவிலை கடையினை அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.


அதைத்தொடர்ந்து அமுதம் நியாயவிலை கடை அருகில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ முழுச் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் மோகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன்,  ரெக்ஸிலின், பவானி மார்ஷல், 49 வது வட்ட அவைத் தலைவர் பெரியசாமி, மரியதாஸ், மாலினி, வட்ட பிரதிநிதி அய்யா துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் மூக்கையா, 49 வது வார்டு கவுன்சிலர் வைதேகி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.