முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் 45 வது வார்டு கழக செயல் வீரர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிரையன்ட் நகர் 5 வது தெரு கிழக்கு காமராஜர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை அமைச்சர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு செயல் வீரர்களுக்கு வேட்டி சட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கவுன்சிலர் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரை நிகழ்த்தினார்.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அவைத் தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ரெக்ஸிலின், விஜய் லெட்சுமி, சரவணகுமார், வட்ட செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், சரவணன், வட்ட பிரதிநிதிகள் சிவசுப்பிரமணியன் (எ) கல்யாணி, சுப்பிரமணிய கட்டபொம்மு, பகுதி விவசாய அணி அமைப்பாளர் பெரிய நாயகம், நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, தகவல் தொழில்நுட்ப அணி அண்ணா துரை, பிரையன்ட் நகர் பகுதி தொண்டரணி அமைப்பாளர் தண்டாயுதபாணி, வட்ட பிரதிநிதி ரஜினி முருகன், ஆட்டோ முனியசாமி, உட்பட கழக செயல் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.