தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ். பிரியங்கா, ஐஏஎஸ் அவர்களை இன்று (22.09.2025) திங்கட்கிழமை காலை புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் மா. மாரிச் செல்வம் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது, முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டது. குறிப்பாக,
முத்தையாபுரம் புல்க் ஜங்ஷனிலிருந்து சூசை நகர் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,
முத்தையாபுரம் பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் தடை செய்யப்பட்ட பன்றி இறைச்சி கடைகளை அகற்றுதல்,
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மக்களை நோய்களிலிருந்து மற்றும் விபத்துக்களிலிருந்து காப்பாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு. மணிகண்டன் உடனிருந்தார்.
தூத்துக்குடி
முத்தையாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை கோரி புரட்சி பாரதம் கட்சியினர் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிருபை நகர் நுண் உர செயலாக்க மையம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
ஏரல் பகுதியில் அரசு மருத்துவமனை, தொழிற்சாலை, அரசு பேருந்து சேவை கோரி ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026