இரண்டு மணி நேரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையாவிற்கு குவியும் பாராட்டுக்கள்.
சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க வருகை தந்த ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையாவிடம் சக்கம்மாள்புரம் கிராம பொதுமக்கள் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒடிந்து விழுந்த மின்கம்மம் மாற்றப்படாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மின் விளக்கு எரியவில்லை எனவும் மின்கம்பத்தை மாற்றம் செய்ய உதவி செய்யயும்படி பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேரடியாக இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ சண்முகையா அங்கிருந்தபடியே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உதவி பொறியாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் 2 மணி நேரத்திற்கு உள்ளாக அந்த இடத்தில் புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்த எம்.எல்.ஏ சண்முகையா விற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்ததோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
மேலும் கடந்த (31.01.2025) அன்று பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான பகுதி நேர ரேசன் கடையை திறந்து சுமார் 4 மாத காலத்திலேயே புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது கோரிக்கை அளித்த இரண்டு மணி நேரத்தில் மின்கம்பத்தை மாற்றிய சட்டமன்ற உறுப்பினரின் பணி இப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
தூத்துக்குடி
மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே. கைலாசபுரம் கிளை கழக செயலாளர் இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026