தூத்துக்குடி மாநகராட்சியில் பல ஆண்டாக குடியிருந்து வரும் மக்களுக்கு சொத்து வரி தீர்வு இல்லாததால் குடிநீர் இணைப்பு பெற முடியாமல் இருந்தது. அந்தப் பகுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ததற்கு மேயர் ஜெகன் பெரியசாமிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். தூத்துக்குடி மாநகராட்சி சுப்பையா நகர் பகுதியில் 34 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இவர்களுக்கு சொத்து வரி தீர்வு இல்லை இதனால் இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை. தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருமாறு மேயரிடம் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மூலம் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர், மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஆகியோர் கவனத்திற்கு இந்த பிரச்சினை தெரிவித்த மேயர் விதிமுறைகளில் தளர்வு செய்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். தற்போது அந்த பகுதி மக்களுக்கு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் வடக்கு மண்டலத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு, கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் சால்வை அணிவித்து நன்றியும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு கவுன்சிலர் ரெங்கசாமி, தலைமையில் மக்கள் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா - பிரையன்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் சார்பில் முதல்நாள் நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரியுடன் தொடங்கியது!!
அடுத்த
முட்புதரில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த மாணிக்கவாசகர் நகர் பகுதி மக்களுக்கு பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026