ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா நிறுவனர் தலைவர் லதா ரஜினிகாந்த் ஆணைப்படியும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் கோவிந்தராஜ், சிவகாசி ரஜினி முருகன் வேல்முருகன் ஆலோசனை படியும்,  

நாசரேத் மில்ரோடு மணி நகர்  பகுதியில் அனாதையாக முட்புதரில் கிடந்த பிறந்த பச்சிளம் குழந்தையை மாணிக்கவாசகர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு முதலுதவி செய்து பால் புகட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த சேவையை ஸ்ரீ தயா பவுண்டேஷன் பிஎப்சி பாரத சேவா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி சுரேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீ தேவி ஆகியோர் நேரில் சென்று பச்சிளம் குழந்தையை மீட்டு போலீஸ் இடம் ஒப்படைத்த மக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.