ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ராஜாவின் கோவில் ஊர் பொதுமக்கள் அருகில் உள்ள சாமிநத்தம் கிராமத்திற்கு சென்று நியாய விலைக் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர்.

ஆதலால் தங்கள் கிராமத்திலேயே நியாயவிலை கடை அமைத்து தந்து பொதுமக்களின் சிரமத்தை போக்குமாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கையின் பலனாக ராஜாவின்கோவில் கிராமத்திலேயே தொடக்க வேளாண் கூட்டுறவு கிளை கடை அமைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து இன்றைய தினம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவன் ஹரிபாலகிருஷ்ணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் வர்த்தக அணி முத்துக்குமார் காளியப்பன் சிறுபான்மை அணி ஞானதுரை ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி இன்றைய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயா கிளைச் செயலாளர்கள் சிவமுருகன் பாலமுருகன் டேவிட் ஞானசேகர் ராஜாவின் கோவில் பன்னீர்செல்வம் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
