தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து,

இன்று தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்புரையாற்றினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மேயரிடம் கொடுக்கப்படும் மனுவிற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை என்றும், அவர் மிக உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று மேயரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
முகாமில் மண்டல தலைவர் பால குருசாமி, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்துமாரி, விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.