தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மாநகர மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருவதாகவும்,

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவின் இருபுறமும் மாநகர மக்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்யும் வண்ணம் ஆரம்பமாகப் போகும் வாக்கிங் டிராக் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பகுதி கழக செயலாளர் ரவீந்திரன்,கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.