பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டு அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஆணையின் படியும் மாநில பொதுச் செயலாளர் N. ஆனந்த் அறிவுரையின் படியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைப் படியும்,



தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவரான  பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்  S. எபனேசர் தலைமையில் பெரியசாமிபுரம் கிளை செயலாளர் ராபின், வேம்பார் கிளைச் செயலாளர் தாவீது ஆகியோரின் ஏற்பாட்டில்,

ஒருங்கிணைத்த தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மீனவரணி பொறுப்பாளர் ஜெபமாலை பாக்கியம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அணிகள் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள், தளபதியின் தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.