பெருந்தலைவர் கு. காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியானது பெருந்தலைவர் கு. காமராஜர் மஹால் ஐக்கிய நாடார் சங்கம் சார்பில் (பிரையன்ட் நகர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டது) பிரையன்ட் நகர் 5 வது தெருவில் அமைந்துள்ள கு. காமராஜர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.



காலை 9 மணியளவில் பெருந்தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும், 10 மணியளவில் மகளிருக்கான கோலப் போட்டியும், அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியளவில் பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி காமராஜரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிக்.அப். டி. தனபாலன் நாடார் டி.எம்.டி. தலைமை வகித்தார். சுகன்யா. செந்தில்குமார் நாடார் எம்.ஏ. வரவேற்புரை நிகழ்த்தினார். மாலை 6 மணியளவில் கட்டுரை போட்டியில், பேச்சு போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோலப் போட்டியில் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசும், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் ஐபிஎஸ், வடதிசை இந்து நாடார்கள் தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கம் தலைவர் நடராஜன், செயலாளர் பழரசம் பா. விநாயகமூர்த்தி, பொருளாளர் எம்.எம். மதியழகன், பள்ளி செயலாளர் எம்.ஜி.எம். ரமேஷ், பிரையன்ட் நகர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா முத்துராஜன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் ஐக்கோர்ட் துரை, தூத்துக்குடி தென் பகுதி நாடார்கள் உறவின்முறை ஐக்கிய சங்கம் தலைவர் மோசஸ் பால்ராஜ், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் துரைராஜ், ஜோசப் நாடார் நற்பணி மன்றம் தலைவர் கனிராஜன், செயலாளர் சவரிராஜ், பொருளாளர் என்.டி. முருகன், ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் காமராஜ் பாண்டியன், துணைச் செயலாளர் பால்சாமி, கௌரவ ஆலோசகர்கள் பாரகன். அந்தோணிமுத்து, முத்துப்பாண்டி, எல். முத்து பாண்டி, சிங்கராஜ், சட்ட ஆலோசகர்கள் சுப்பிரமணிய ஆதித்தன், ரூஃபஸ் அமிர்தராஜ், தர்மகர்த்தா முத்துராஜன், சொத்து பாதுகாப்பு குழு ஆர். சுப்பையா, வெற்றிராஜன், சிவக்குமார், ரூபராஜா, பொன் கார்த்திகேயன், அன்பரசன், ஜெயசந்திர பிரபாகரன், செயற்குழு உறுப்பினர்கள் கனிராஜன், இலட்சுமணன், ஞானசேகர், மாரியப்பன், சக்திவேல், ரத்தினவேல், ஆறுமுகப்பெருமாள், சந்திரன், முத்துராஜ், சுயம்பு லிங்கம், செல்வகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரையன்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கம் தலைவர் பிக். அப். தனபாலன் நாடார், செயலாளர் சுகன்யா. செந்தில்குமார் நாடார், பொருளாளர் பொன் சுகுமார் நாடார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.