கல்விப் பயலும் ஏழை எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு மூலமாக கல்விக்கு கண் திறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு மூலக்கரை N. வெங்கடேச பண்ணையார் நற்பணி மன்ற சார்பாக மாநில பொதுச் செயலாளர் சொர்ணவேல் நாடார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் சிலுவை நாடார் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.C. துரை நாடார் ஆகியோர்களின் தலைமையில்,

தூத்துக்குடி மாநகர மையப் பகுதியில் அமைந்திருக்கும் திருவுருவ சிலை மற்றும் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வெற்றிக் கழகம் சார்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மற்றும் பல இளைஞர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பித்தனர்.