தூத்துக்குடி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களின் ஆலோசனையின் பேரில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, 44வது வார்டு திமுக சார்பில் மனிதநேய சேவை நிகழ்வு நடைபெற்றது.


வட்ட செயலாளர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நல்லாயன் செவித்திறன் குறைந்தோருக்கான மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. சமூக பொறுப்புணர்வும், சேவை மனப்பான்மையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ்வரன் சிங், மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, பகுதி அவைத் தலைவர் பால் சாமி, இளைஞரணி சுப்பிரமணியன், மாநகர திமுக பிரதிநிதி சுகன்யா செந்தில்குமார், வட்ட பிரதிநிதி வெற்றி ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி உமா மகேஷ் மற்றும் பெரியசாமி, எடிசன், முத்துமணி, தர்ம பிச்சை, முருகன், குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


மாணவர்களிடையே மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுத்திய இந்த மனிதநேய முயற்சி, கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களின் சமூக அக்கறையையும், திமுகவின் சேவை அரசியலையும் எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்தது.