ஞாயிற்றுக்கிழமையான இன்று (25.05.2025) திருச்சி மாநகரில் ராணுவ திடலில் தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட் என்ற தலைப்பில் சிந்தூரி ஆபரேஷன் போரில் இந்தியாவிற்காக வீரம் காத்த ராணுவ வீரர்களுக்கு சல்யூட், ஜெய்ஹிந்த் சல்யூட் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு திருச்சி மாநகரில் ராணுவ மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


புதுடெல்லியில் இருந்து இந்த மாநாட்டிற்கு முக்கிய தலைவர்கள், பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்க இருக்கிறார்கள். ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட், ஜெய்ஹிந்த் சல்யூட் என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. என்று காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்திருந்த நிலையில்,

தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள ஐஎன்டியுசி அலுவலகத்தில் இன்று மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பெருமாள்சாமி தலைமையில் ராணுவ வீரர்களுக்கு சல்யூட், மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாநகர பொது செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், காங்கிரஸ் ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன், மாநில பேச்சாளர் பார்த்திபன், மாப்பிள்ளையூணி எட்வர்ட், ரூஸ் வெல்ட், அசனார், காமராஜ், AICWC மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜெயஜோதி, AICWC மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, AICWC மாவட்ட செயலாளர் வசந்த்தி, AICWC மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மைதீன், AICWC மீனவர் அணி கிளாடிஸ், சேகர், முருகசேன், சாந்த குமார், பாலகிருஷ்ணன், காங்கிரஸ் SC/ST முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், சுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரதீப் தினகரன், வழக்கறிஞர் செல்வம், அய்யாதுரை, ஏசுதாசன், சிவலிங்கம், தாமஸ், INTUC சார்ந்த முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர் பாலன் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்.