கல்வி கண் திறந்த கர்ம வீரர், பள்ளியில் மதிய உணவு திட்டத்தை தந்த தலைவர், முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதை முன்னிட்டு தூத்துக்குடி (பெரிய மார்க்கெட்) வ.உ.சி. காய்கறி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ வெண்கல முழுச் சிலைக்கு தூத்துக்குடி மாநகர மத்திய மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
