பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C. சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெயக்கொடி, துணைச் செயலாளர் ஏஞ்சலின், ஜெனிட்டா ஜெபாஸ்டின்,
தூத்துக்குடி மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், தலைமை கழக பேச்சாளர் பொன்னரசு, கழக இளம் பேச்சாளர் சண்முக நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், மகளிர் அணி அமைப்பாளர் வரலட்சுமி, தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், கிளைச் செயலாளர் சஞ்சய்குமார், பால்சாமி, ஜெயக்குமார், துரைசிங், மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.