ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்சி.சண்முகையா தலைமையில் நடைபெற்றது.


ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சங்கம்பட்டி கிராமத்தில் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கைப்பம்புகள் அமைக்கும் பணியும், முறம்பன் கிராமத்தில் தர்மத்தாய் ஊரணியில் ரூ.2.72 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.


அதேபோல், குலசேகரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குலசேகரநல்லூர் கிராமத்தில் ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணியும், ஓசநூத்து கிராமத்தில் தெற்கு தெருவில் ரூ.2.72 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணியும் எம்சி.சண்முகையா எம்எல்ஏ அவர்களால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.


இம்முயற்சிகளின் மூலம் கிராமப்புற மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் ராஜ்குமார், ஊராட்சி செயலர்கள் அனிதா மற்றும் முருகேசன், ஒன்றிய துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மகளிரணி கவிதா, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் அருண், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன் மற்றும் லதா கருணாநிதி, கிளை செயலாளர்கள் சேதுராமன், முருகன், சிவன், வேல்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான ஊர் பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.