தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி 25வது வார்டில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாமானது இன்று மாலை வார்டுக்குட்பட்ட புதுத்தெரு மெயின் ரோட்டில் வைத்து நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு 25 வது வார்டு பகுதி பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டு மனுவின் மீது பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.
முகாமில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கவுன்சிலர்கள் எடின்டா, ரெக்ஸ்லின், மற்றும் 25 வது வார்டு பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு அமைச்சரிடம் மனுக்களை வழங்கினர்.
