அதிமுக நிறுவனர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க, மாநில வர்த்தக அணி சார்பில் பல்வேறு இடங்களில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, டூவிபுரம் அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் வர்த்தக அணி அலுவலகம் ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும், தருவை மைதானம் முன்பு உள்ள அவரது சிலைக்கும் மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் முடி காணிக்கை செலுத்திய செல்வகுமாருக்கு புத்தாடை வழங்கி கௌரவித்த அவர், எம்ஜிஆர் தமிழக அரசியலில் மக்கள் நலன் மையமாக கொண்டு செயல்பட்ட தலைவர் என்றும், ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆட்சியாளர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. நட்டார்ஜி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட மீனவரணி துணைத் தலைவர் டெலஸ்பர், சிறுபான்மை பிரிவு பொருளாளர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாரியப்பன், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ரத்தினம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சகாயராஜ், முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமல்ட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரா, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சி முழுவதும் எம்ஜிஆரின் மக்கள் நலப் பணிகளையும், அவரது அரசியல் மரபையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது.