தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா்.
இணை ஆணையர் சரவணக்குமாா், துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோா் முன்னிலை வகித்தனர். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினாா்.
முகாமை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓரு புறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 11 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
ஆரம்பத்தில் 120 மனுக்கள் வந்தது தற்போது குறைந்து 40 மனுக்கள் தான் வருகிறது. இந்த மண்டலத்தில் 611 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 592 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 19 மனுக்கள் மட்டும் பெண்டிங் உள்ளது. கிழக்கு மண்டலம் மாநகராட்சியின் பழைய பகுதி நூறு வருடத்திற்கு முன்பு உள்ள பகுதி இதுதான் வார்டு 23 முதல் 28 வரை பழைய நகராட்சியின் வார்டுகள் சின்ன சந்துகள் 4 அடி 5 அடி உள்ள சாலைகள் எல்லாம் பேவா்பிளாக் கல்லுகள் பதிக்கப்பட்டுள்ளது. 1500 புதியதாக லைட்டுகள் வரப்படுகிறது பீச் ரோடு முத்து நகர் கடற்கரையில் சனி ஞாயிறு 2000 பேர் வருகை தருகிறார்கள். தற்போது கோடை கால விடுமுறை என்பதால் தினசரி 2000 பேர் வருகிறார்கள். அங்கு ஓய்வு அறை கேட்டார்கள் அது அமைக்கப்பட்டு வருகிறது. ரோச் பூங்கா நல்ல முறையில் மீண்டும் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு வருங்காலங்களில் பல்வேறு வசதிகளுடன் அங்கு அமைக்கப்பட உள்ளது. பீச் ரோட்டில் ஒரு புறம் தான் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அதன் எதிர் புறத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது விவிடி சிக்னல் முதல் பழைய துறைமுகம் வரை ரோட்டின் இருபுறமும் அழகுப்படுத்தும் வகையில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதுபோல சிஎஸ்ஐ சர்ச் எதிரே உள்ள பூங்கா முதியோர்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வசதியாக அங்கே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பெரிய மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி ஒன்று தான் வஉசி கல்லூரி அருகில் புதியதாக விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவசமாக பயன்படுத்த இன்னும் பத்து நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சண்முகபுரம் பகுதியில் புழு கலர் பைப் லைன் பதிக்கப்பட்டு வருகிறது. குளோரின் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று பார்த்து சேர்க்கப்பட்டு சுத்தமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட நாள் கோரிக்கையான தெப்பக்குளம் அனுமதி அரசு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள நீரை அப்புறப்படுத்தப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் குழந்தைகள் கண்டு களிக்கும் வகையில் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. தெப்பக்குளத்தில் போட் வசதியும் மக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வெங்கட்ராமன், உதவி பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், நகா்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நெடுமாறன், இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் தனலட்சுமி, ராமுஅம்மாள், பேபி ஏஞ்சலின், மகேஸ்வாி, ரெக்ஸ்லின், மாியகீதா, மும்தாஜ், ரிக்டா, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினா் ஆர்தா்மச்சாது, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்தை இன்னும் 10 நாட்களில் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34 வது நினைவு தினம் - காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி ஏற்பாட்டில் காங்கிரஸ் கமிட்டி ஒர்க்கர்ஸ் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமையில் மரியாதை!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., விற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட கூடாது என்று தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் - தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் பரப்பு குற்றச்சாட்டு!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026