தூத்துக்குடி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் ஆரம்பமாகும் இடங்கள் குறித்து இன்று (07.07.2025) மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி, போல்பேட்டை பகுதி தொண்டரணி துணை அமைப்பாளர் அன்பரசன் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.